தனிப்பட்ட பேட்டி PRIVATE INTERVIEW 64-07-05 1. நான் அந்த நேரத்தில் மருத்துவமனையில் உங்களை சந்திக்கிறேன். நான் அடிக்கடி உங்களுக்காக ஜெபித்தேன். நீங்கள் மரிக்கும்படி தேவன் உங்களை விடமாட்டார், ஏனெனில் நீங்கள் சபைக்கு முக்கியமானவராக இருக்கிறீர்கள். இப்பொழுது உங்களை எனக்கு தெரியும் சகோதரி ப்ரூஸ். நீங்கள் சுகமடைய போகிறீர்கள் என்பது எனக்கு தெரியும். நான் அதை என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கின்றேன். பாருங்கள். (சகோதரி ஜார்ஜியா ப்ரூஸ், "சகோ. பிரன்ஹாம் எல்லாவற்றுக்கும் மேலாக, நான் பரிசுத்தாவியால் முத்திரையிடப்படும் அனுபவத்தை விரும்புகிறேன். தேவன் அதை உங்கள் இருதயத்தில் வெளிப்படுத்துவாரானால் ! என்று கூறுகிறார். - ஆசிரியர்) 2. சகோதரி ப்ரூஸ் நீங்கள் ஒரு உண்மையான மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர் என்பதை என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன், எப்படி அந்த ஆவி போக முடியும் ? நீங்கள் சுகவீனப்படும் போது களைப்படைகிறீர்கள். மேலும் நீங்கள் ஒரு பயந்த சுபாவமுடையவர்களாய் இருக்கிறீர்கள். (சகோதரி ப்ரூஸ் ஆம் என்கிறார்கள். - ஆசிரியர்) பாருங்கள் ? மேலும் நீங்கள் மனதில் காரியங்களை பெற்றுள்ளீர்கள். பாருங்கள் சிறிய மனக்கிலேசமான காரியங்களை. அது அப்படியே இரு வழிகளில் கட்டிடத்தைக்கட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறது. நீங்கள் உங்கள் இருதயத்தில் சிலரை வைத்து, அவர்களுக்காக ஜெபிக்க விரும்புகிறீர்கள். நீங்கள் எழும்பி அதற்காக ஜெபிக்கிறீர்கள். அந்த ஒருவருக்காக ஜெபிக்கும்வரை, உங்களால் இளைப்பாற முடிவதில்லை. அது தான் நீங்கள். அப்பொழுது மற்றொரு வகையில், சாத்தான் கட்டாயமாக சில காரியங்களை செய்கிறான். மேலும் இந்த பாதைக்கு வெளியே பாருங்கள். பாருங்கள் ? மேலும் தேவன்... நீங்கள் இயல்பாகவே இருக்கின்றீர்கள். மேலும் தேவன் கிரியை செய்கிறார். நீங்கள் விசுவாசிக்கவில்லை என்று உங்களை நம்பச் செய்ய சாத்தான் முயற்ச்சிக்கும் போது, சாத்தான் கிரியை செய்கிறான். பாருங்கள் ? சகோதரி ப்ரூஸ் உங்களை நீங்கள் பார்க்க வேண்டாம். நினைவில் கொள்ளுங்கள். 3. நான் உங்களுக்காக ஜெபிக்க முடிவு செய்து கொண்டிருக்கிறேன். நான் அதற்கு தகுதியானவன் அல்ல. "இயேசு கிறிஸ்து இப்பொழுது இங்கிருப்பாரானால், நான் என்ன செய்ய முடியும் ? " என்று நான் நினைக்கிறேன். அவர் இங்கே உட்கார்ந்து கொண்டிருந்தால், அவர் என்ன செய்ய முடியும் ? அவருடைய மகா விசுவாசத்துடன், அவருடைய கரத்தை உங்கள் மேல் வைக்கிறார், பாருங்கள், நீங்கள் சுகமடைகிறீர்கள். "நல்லது" நான் நினைக்கிறேன். "நல்லது" நான் ஒரு பாவி, நான் அவரல்ல. ஆனால் நான் அவரை அடையாளமாக கொண்டு வருகிறேன். ஆனால் என்னை ஒரு பாவியென்று நினைவு கூறுங்கள். தேவனுக்கு முன்னால் நான் ஒரு பாவியில்லை. நீங்களும் அல்ல. அங்கே கிடக்கும் ஒரு இரத்தம் தோய்ந்த பலியை நாம் பெற்றுள்ளோம். தேவன் எப்போதும் நம்மை பார்க்க முடியாது. அவர் நம்முடைய சத்தத்தை கேட்கிறார். ஆனால் அவர் கிறிஸ்துவின் இரத்தத்தையே காண்கிறார். இது தான் அது. பாருங்கள்? அவர் தம்முடைய சொந்த குமாரனுடைய இரத்தத்தையே பார்க்கிறார். இது நம்முடைய சத்தம் ; கிறிஸ்தவினுடைய இரத்தம் ; அப்படியாயின் கிறிஸ்துவே நம் வழியாக தேவனிடம் பேசிக் கொண்டிருக்கிறார். எனவே நாம் பாவியல்ல. இல்லை. நாம் கிறிஸ்தவர்களாக இருக்கிறோம். நீங்கள் ஒரு உண்மையான கிறிஸ்தவராக இருப்பதை நான் விசுவாசிக்கிறேன். நான் காரியத்தை நினைவு கூறுகிறேன். (சகோதரி ப்ரூஸ் நான் அநேக தவறுகளை செய்திருக்கிறேன். மேலும் அநேக முறை தவறியிருக்கிறேன் என்கிறார். - ஆசிரியர்) 4. அதற்காக தான் கிறிஸ்து மரித்தார். உங்கள் தவறுகளுக்காக உங்களுக்கு விலைகிரயத்தை செலுத்தினார். பாருங்கள்? உங்கள் தவறுகளை அவர் எடுத்து விட்டார். | 5. அவரை சேவிப்பதே உங்கள் இருதயத்தின் வாஞ்சையாக உள்ளது. (சகோதரி ப்ரூஸ் ஆம் என்கிறார்கள். - ஆசிரியர்) சரி , அவர் எதற்காக மரித்தாரோ அதுவே தான். எனவே நீங்கள் அவரை சேவிக்க முடியும். பாருங்கள்? உங்கள் தவறுகளை அவர் பார்ப்பதில்லை. உங்கள் தவறுகள் உங்களுடையதல்ல. பாருங்கள்? அவர் உங்கள் பதிலாளாக இருக்கிறார். பாருங்கள்? அவர் உங்கள் பாவ நிவாரண பலியாக இருக்கிறார். உங்கள் பாவங்கள் அறியப்படவில்லை. தேவனுக்கு முன்பாக நீங்கள் ஒரு பாவியல்ல. கிறிஸ்து உங்களுடைய பாவங்களை எடுத்து கொண்டு, உங்களை உண்டாக்கினார். ஏனெனில், அவரை சேவிக்க நீங்கள் வாஞ்சிக்கிறீர்கள். (சகோதரி ப்ரூஸ், "ஆனால் என்னிடத்தில் இறங்கி கால் பதிக்க, நான் பரிசுத்தாவியால் நிறையப்படும் ஒரு அனுபவத்தை நான் பெற்றிருக்கவில்லை என்கிறார்கள். - ஆசிரியர்) 6. சரி , இதை கவனியுங்கள். சாதாரணமாக ஒரு மனிதன் பாவத்தில் பிறந்து , அக்கிரமத்தில் உருவாகி , பொய் பேசுகிறவனாக உலகத்தில் வருகிறான். அது ஒரு மனிதனின் இயல்பாக உள்ளது. (சகோதரி ப்ரூஸ் ஆம் என்கிறார்கள். - ஆசிரியர்) அது உங்களுடைய இயற்கையான குணம். அது ஒரு முறை மாற்றப்பட்டது. ஆனால் அதை மாற்றினது என்ன ? (கிறிஸ்து) சகோதரியே அங்கே தான் நீங்கள் இருக்கிறீர்கள். பாருங்கள் ? இது தான் அது. 7. "என் வசனத்தை கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக் கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு ; அவன் ஆக்கினை தீர்ப்புக்கு உட்படாமல் மரணத்தை விட்டு நீங்கி , ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறான். "கடந்த காலம் " மரணத்தினின்று நீங்கி ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறான். " யோவான் 5: 24 ல் இயேசு சொல்லுகிறார். பாருங்கள்? 8. எனவே சகோதரி ப்ரூஸ் நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருக்கிறீர்கள். நான் உங்கள் ஜீவியத்தை கவனித்தேன். தரிசனத்தின் கீழ், நான் உங்களை கவனித்திருக்கிறேன், நீங்கள் ஒரு கிறிஸ்தவராக உள்ளதை அறிகிறேன். பாருங்கள். ஒரு மாசும் இல்லை ... பாருங்கள் ? நான் உங்கள் மேய்ப்பன், உதவுவதற்காக அது இருந்தது போல். (சகோதரி ப்ரூஸ் "ஆம் " என்கிறார்கள். - ஆசிரியர்) பாருங்கள்? என் மனதில் ஏதாவது சந்தேகமிருந்தால் , உங்களில் ஏதாகிலும் தவறு இருந்தால், நான் உங்களிடம் சொல்லியிருப்பேன், சகோதரி ப்ரூஸ் ( "நான் அதை விசுவா சிக்கிறேன்" ) சகோதரி ப்ரூஸ். ஆனால் உங்கள் அனுபவத்தில் ஏதாவது தவறு இருக்குமானால், இதுவரையில் அதை பற்றி நான் அறிந்துள்ளபடி, அங்கு ஒரு காரியமும் இல்லை . அங்கே ஒரு காரியமும் தவறாக இல்லை. நாம் இப்பொழுது ஜெபிக்க போகிறோம். ( "சகோதரி ப்ரூஸ்" இருதயத்திற்காக தேவன் எதையாகிலும் செய்யவில்லை என்றால் நான் மரிக்கப்போகிறேன் என்கிறார்கள். - ஆசிரியர்) 9. சகோதரி ப்ரூஸ் நீங்கள் மரிக்கப் போகிறதில்லையென்று நான் நினைக்கிறேன். அதுவாக இருந்தால் அது என்னிடமிருந்து மறைக்கப் பட்டிருக்கிது. (சகோதரி ப்ரூஸ் " நன்றி சகோதரனே" என்கிறார்கள். - ஆசிரியர்) 10. இந்த சிறிய ஸ்திரீ எப்பொழுதும் நல்லவைகளையே செய்திருக்கிறார்கள். (சகோதரி ப்ரூஸ் " ஓ தேவனே " என்கிறார்கள். - ஆசிரியர்) அவர்கள் பழைய டார்கஸை போல முயற்ச்சித்தார்கள். மேலும் இப்பொழுது அவர்களுடைய இருதயம் மிகவும் மோசமாக இருக்கும் இந்த நேரத்தை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். ("ஓ") உம்மிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று, உம்முடைய வார்த்தை சொல்லவில்லையா ? அதில் எங்கள் முழு ஆத்துமாவையும், முழு மனதையும் வைக்கிறோம். அப்பொழுது நீர் ஏதாகிலும் நடப்பித்து கொண்டிருந்து , நாங்கள் அதை பற்றி எதையும் அறியாமல் இருக்கலாம். (" நன்றி தேவனே !" ) அவை எல்லாம் நன்மைக்காகவே. அவர்கள் உம்மை நேசிக்கிறார்கள். 11. இப்பொழுது எங்களெல்லாருக்கும் பெரிய மேய்ப்பருக்கு , அவருடைய நாமத்தில், என் சகோதரி மீது என் கரங்களை வைக்கிறேன். அவர்களை உருவாக்கி இவ்வுலகத்திற்கு அவர்களை கொண்டு வந்த தேவன் தாமே , உம்முடைய வேலையாளாய் இருப்பதற்கு, உலகத்தின் காரியங்களிலிருந்து அவர்களை வெளியே முத்திரையிட்ட அவருடைய ஆவி தாமே, இவர்களுடைய வியாதிப்பட்ட சரீரத்தை சுகமாக்குவதாக. முழுமையாக அவர்களுக்கு சுகத்தை உண்டாக்குவாராக. தேவனே அவர்கள் எங்களுக்கு ஊழியத்தில் தேவைப்படுகிறார்கள். இந்த ஜெபத்துடன் என்னை நானே ஈடுபடுத்த, என் கரங்களை அவர்கள் மீது வைத்து, விசுவாச ஜெபத்துடன் நான் அவர்களை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கிறேன். இந்த மலையை பார்த்து, "இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் விலகிப்போ " என்று சொல்லுகிறேன். எங்கள் சகோதரி தாமே தேவனுடைய இராஜ்ஜியத்திற்காகவும், தேவனுடைய மகிமைக்காகவும் ஜீவிப்பார்களாக. ("சிறந்த வேலைப்பாடு" என்ற அவருடைய செய்திக்கு முன் நடைபெற்ற பாடல் ஆராதனையின் போது, அவருடைய அலுவலகத்தில் அமர்ந்து , சகோதரி ஜார்ஜியா ப்ரூஸ் அவர்களிடம் பேட்டி கண்டார். சகோதரி ப்ரூஸ் 1902 - ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 8 - ஆம் தேதி பிறந்தார். இந்த பேட்டிக்கு பிறகு , இயேசு கிறிஸ்துவுக்காக 27 வருடங்கள் ஜீவித்து , 1991 - ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 7 -தேதி, தன்னுடைய 89 - ஆம் வயதில் மரித்தார். 1975 - ஆம் ஆண்டு சகோ. கென்னத் ஆன்டஸ் அவர்களுக்கு, சகோதரி ப்ரூஸ் கொடுத்த மூல ஒலி நாடாவிலிருந்து , புத்தக வடிவில் கொண்டு வரப்பட்டு ,இலவசமாக வினியோகிக்கப்படுகிறது. - ஆசிரியர்).